Varagarisi Spicy Uppuma (வரகரிசி ஸ்பைசி உப்புமா )
தேவை: வரகரிசி - 2 கப், பாலக்கீரை விழுது - 1 கப், பச்சைமிளகாய் - 6, புளித் தண்ணீர், வெல்லம், உப்பு - தேவைக்கு, தேங்காய் - 1 மூடி, உளுத்தம் பருப்பு, க. பருப்பு, கறிவேப்பிலை - தேவைக்கு, நெய் - 1/2 கப், முந்திரி -5.
செய்முறை: வரகரிசியை ஒரு மணி நேரம் ஊறவைக்கவும். வாணலியில் கடுகு, காயம், உ.பருப்பு, க.பருப்பு போட்டு நெய்யில் தாளிக்க வேண்டும். அதில் பாலக்கீரை விழுது, புளித் தண்ணீர், உப்பு, சிறிது வெல்லம் போட்டு நீர்க்கக் கரைக்கவும். கொதித்ததும் வரகரிசி போட்டுக் கலந்து மிதமான தீயில் கலந்துகொண்டே இருக்கவும். பச்சை மிளகாயை அரைத்து விழுதாகச் சேர்க்கவும். மூடி வைத்து அடிக்கடி கிளறிக்கொண்டே இருக்கவும். மேலாக தேங்காய்த் துருவல்,
நெய்யில் வறுத்த முந்திரி போடவும். உதிரியாக வரும்வரை மூடிவைத்துக் கிளறவும். வரகரிசி உப்புமா தயார்.
No comments:
Post a Comment