Ulunthu Satham (உளுந்து சாதம், எள்ளு துவையல் )
தேவையான பொருட்கள்: அரிசி - 2 கப்
பூண்டு - 2 கட்டி
கடுகு - 1/4 டீஸ்பூன்
தொலி உளுந்து - 1/2 கப்
சீரகம் - 1 டீஸ்பூன் வரமிளகாய் - 2
தேங்காய் - 1/2 கப் உப்பு, எண்ணெய், பெருங்காயத்தூள் - தேவையான அளவு
செய்முறை:
முதலில் அரிசியையும், தொலி உளுந்தையும் இள வறுப்பாக வறுத்துக்கொள்ளவும். பூண்டை உரித்து இடித்துக்கொள்ளவும். வாணலியில் தேவையான அளவு எண்ணெய் ஊற்றி கடுகு போட்டு பொரிந்தவுடன் சீரகம், பூண்டு, வரமிளகாய், தேங்காய் ஆகியவற்றைப் போட்டு வதக்கி, பின்பு தேவையான' அளவு (2 கப் அரிசிக்கு 6 கப் தண்ணீர்) தண்ணீர்விட்டு உப்பு, பெருங்காயப்பொடி தேவையான அளவு போட்டு பின்பு அரிசியையும், உளுந்தையும் சேர்த்துக் கிளறி குக்கரில் வைத்து வேகவைக்க வேண்டும். இந்த சாதத்திற்கு தொட்டுக்கொள்ள எள்ளு துவையல் ஏற்றது.
பலன்: பெண்களுக்கு மாதவிடாய் கால துன்பங்களைக் குறைக்கும், மாதவிடாய் நிற்கும் காலங்களில் வரும் உபாதைகள் குறைவதோடு, எலும்பின் கால்சியம் சத்துக்கு உளுந்து சாதம் அவசியம் எடுத்துக்கொள்ள வேண்டும். எள்ளு கர்ப்ப பைக்கு வலுசேர்க்கும்.
எள்ளு துவையல்: எள்ளு 1/2 கப், தேங்காய் 1/2 கப், உப்பு, புளி, வரமிளகாய். எள்ளு மற்றும் வரமிளகாய் வறுத்து தேங்காய், உப்பு. புளி சேர்த்து அரைத்தால் எள்ளு துவையல் ரெடி.
No comments:
Post a Comment