Ginger tart ( இஞ்சி பச்சடி )
தேவையான பொருட்கள்:
இஞ்சி - 50 கிராம் மல்லிவிதை (தனியா) - 25 கிராம் தேங்காய் துருவல் -1/2 பாகம் உப்பு - தேவையான அளவு வரமிளகாய் - 2 நல்லெண்ணெய் - 2 டீஸ்பூன்
கடுகு - 1/2 டீஸ்பூன் கறிவேப்பலை - 2 இணுக்கு
செய்முறை:
இஞ்சியை வட்ட வட்டமாக நறுக்கி அதை வாணலில் கொஞ்சம் எண்ணெய் ஊற்றி சிவப்பாக வறுத்து வைக்கவும். பிறகு துருவிய தேங்காய், தனியா, மிளகாய் இவற்றையும் தனித்தனியாக வறுக்கவும் பிறகு இவற்றை வறுத்த இஞ்சியுடன் சேர்த்து உப்பு சேர்த்து நைசாக அரைக்கவும். பிறகு வாணலில் நல்லெண்ணெய் ஊற்றி அதில், கடுகு, கருவேப்பலை போட்டு தாளித்து அரைத்த விழுதைக் கொட்டி நன்றாக வதக்கவும்,
பலன்: உடலுக்கு நல்ல ஜீரண சக்தியைக் கொடுக்கும் வாயுக் கோளாறை நீக்கும். குறிப்பு: இஞ்சி பச்சடியை இட்லி, தோசை, தயிர்சாதம், சப்பாத்தி, இவற்றுக்கு
தொட்டுக் கொள்ளலாம். சாதத்தில் பிசைந்தும் சாப்பிடலாம்.
No comments:
Post a Comment