Spinach spinach juice (மணத்தக்காளி கீரை தண்ணிசாறு )
தேவையான பொருட்கள்:
பயத்தம் பருப்பு - 2 டீஸ்பூன்
சிறிய வெங்காயம் – 10 மணத்தக்காளி கீரை - 1 கப்
தண்ணீர் - 1/2 லிட்டர் சீரகம் - 1 டீஸ்பூன்.
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
பயத்தம்பருப்பை வேக வைத்துக்கொள்ளவும். 1/2 லிட்டர் தண்ணீரில் வேகவைத்த பருப்பு, உரித்த வெங்காயம், சீரகம், உப்பு இவற்றைப்போட்டு கொதி வந்தவுடன் கீரையைப் போட்டு வெந்தவுடன் இறக்கி வைத்து காய்ச்சி ஆறிய பால் 1/2 டம்பளர் ஊற்றவும. 1 டீஸ்பூன் தேங்காய் பூ தூவவும். பால் சேர்க்கப்பிடிக்காதவர்கள் தேங்காய்ப் பால்சேர்த்துக் கொள்ளவும்,
பலன்: ஏற்றது.
வாய்ப்புண், வயிற்றுப்புண் குணமாகும். வெய்யில் காலத்திற்கு
இந்த மணத்தக்காளி தண்ணி சாறை சாதத்தில் ரசம்போல ஊற்றி சாப்பிடலாம். சூப் போலவும் அருந்தலாம்.
குறிப்பு : இதே முறையில் அகத்திக்கீரை தண்ணிசாறு முருங்கைக்கீரை
தண்ணி சாறு ஆகியவையும் செய்யலாம்.
அகத்திக்கீரை தண்ணி சாறு 15 நாட்களுக்கு ஒரு முறை எடுத்துக்கொண்டால் குடல் தூய்மையாகும். குடலுறிஞ்சிகளின் செயல் திறன் அதிகரிக்கும்.
No comments:
Post a Comment