Types of baths (துவையல் வகைகள் ) - COOKING TIPS AND COOKING STYLE

We providing Latest Cooking tips and cooking notes for free

Sunday, 18 July 2021

Types of baths (துவையல் வகைகள் )



Types of baths  (துவையல் வகைகள்  )




கொள்ளு துவையல்

தேவையான பொருட்கள்:

கொள்ளு - 1 கப்

வரமிளகாய் - 2

தேங்காய் துருவல் - 1/2 கப்

புளி - சிறிது

உப்பு, எண்ணெய், கடுகு - தேவையான அளவு

செய்முறை:

கொள்ளு, மிளகாய், தேங்காய் துவலை தனித்தனியாக வறுத்து பின்பு உப்பு. புளி சேர்த்து நைசாக அரைத்து கடுகு தாளித்துப்போட்டு சாதத்தில் பிசைந்து சாப்பிட

பயன்படுத்தலாம்.

பலன் : கெட்ட கொழுப்பை அகற்றும்

உடல் பருமனைக் குறைக்கும்.

பிரண்டை துவையல்

செய்தது)
தேவையான பொருட்கள்:

இளம் பிரண்டை துண்டு - 2 கப் (சுத்தம்

கடலை பருப்பு - 2 டீஸ்பூன்

உளுத்தம்பருப்பு-1 டீஸ்பூன்

வரமிளகாய் - 3 (அ) 4

புளி - சிறிது

தேங்காய்-1/2 கப்

உப்பு, எண்ணெய், கடுகு - தேவையான அளவு

செய்முறை:

வாணலியில் எண்ணெய் ஊற்றி கடலைபருப்பு, உளுத்தம்பருப்பு, மிளகாய், தேங்காய்

இவற்றை நன்றாக வதக்கி வைத்துக்கொள்ளவும்.

பிரண்டை துண்டுகளை எண்ணெய் சேர்த்து வாணலியில் நன்றாக வதக்கிக் கொள்ளவும். வதக்கிய பொருட்களுடன் உப்பு, புளி சேர்த்து அரைத்தால் துவையல் ரெடி.

பலன்: பிரைண்டையில் கால்சியம் அதிகமாக உள்ளது. எலும்பு உறுதிப்படும். மூலநோய் உள்ளவர்களுக்கு பிரண்டை மிகவும் நல்லது. நார்சத்து மிகுந்தது.

No comments:

Post a Comment