Their cauliflower (தம் காலிஃப்ளவர் ) - COOKING TIPS AND COOKING STYLE

We providing Latest Cooking tips and cooking notes for free

Saturday, 24 July 2021

Their cauliflower (தம் காலிஃப்ளவர் )



Their cauliflower (தம் காலிஃப்ளவர்  )




தேவையான பொருட்கள்: காலிஃப்ளவர் - கால் கிலோ, மிளகாய்த்தூள் -

ஒரு தேக்கரண்டி, உப்பு - தேவையான அளவு. தாளிக்க: நெய் அல்லது தேங்காய் எண்ணெய் - 2 தேக்கரண்டி, சீரகம் -

அரை தேக்கரண்டி, கறிவேப்பிலை - சிறிதளவு, பூண்டு - 1 பல் பொடியாக அரிந்தது, கரம்மசாலா தூள் - கால் தேக்கரண்டி (பட்டை, கிராம்பு, ஏலம்).

செய்முறை: காலிஃப்ளவரை பூக்களாக பிரித்து வெந்நீரில் சிறிது உப்பு சேர்த்து அலசி எடுக்கவும். ஒரு வாயகன்ற பாத்திரத்தில் தாளிக்க கொடுத்துள்ளவைகளை சேர்த்து தாளித்து காலிஃப்ளவர் சேர்த்து சிறிது வதக்கி 5 நிமிடம் வேகவிடவும். பிறகு மிளகாய் தூள், உப்பு தூள் சேர்த்து நன்கு வதக்கி சிறிது கரம்மசாலா தூவி கிளறி மூடிபோட்டு சிறு தீயில் தம்மில் 10 நிமிடம் வேகவிட்டு இறக்கவும்.

- ஜலீலா கமால்

பரிமாறும் அளவு: 1 மொத்த கலோரி: 185, புரதம்: 6, கொழுப்பு: 11, மாவுச்சத்து: 13.

No comments:

Post a Comment