Paleo Pygmy Baji Roasted Cauliflower (பேலியோ பைங்கன் பாஜி ரோஸ்டட் காலிஃப்ளவர் )
தேவையான பொருட்கள்: கத்திரிக்காய் - 250 கிராம், சீஸ் - கால் கப்,
கொத்தமல்லி இலை - சிறிதளவு.
ஊறவைக்க: தயிர் - அரை கப், மிளகாய் தூள் - 1 தேக்கரண்டி, இஞ்சி பூண்டு விழுது - 1 தேக்கரண்டி, மசாலாத்தூள் - 1 தேக்கரண்டி, நெய் - 2 மேஜைக்கரண்டி, உப்பு - தேவையான அளவு. செய்முறை: பெரிய கத்திரிக்காய் ஒன்றை எடுத்து அதை மெல்லிசான
வட்டமாக வெட்டிக் கொள்ளவும். ஒரு பாத்திரத்தில் சிறிது தயிர், உப்பு,
மிளகாய் தூள், வீட்டில் செய்த இஞ்சி பூண்டு விழுது, மசாலா தூள்,
கொஞ்சம் நெய் சேர்த்து நன்றாக கலக்கி அதில் கத்திரிக்காய்
துண்டுகளை ஒரு மணி நேரம் ஊற வைக்கவும். பின் அதை ஒரு பேக்கிங்
டிஷ்க்கு மாற்றி மைக்ரோ ஓவெனில் க்ரில் மோட் பத்து நிமிடம் வைத்து
எடுக்கவும். மேலே சீஸ்.. கொத்தமல்லி இலை தூவி அலங்கரிக்கவும்.
ரோஸ்டட் காலிஃப்ளவர் காலிஃப்ளவர் துண்டுகளை உப்பு சேர்த்த கொதிநீரில் சிறிது நேரம் வைத்து விட்டு
மேலே சொன்ன அதே மாதிரி மசாலா கலவையில் நன்றாக பிரட்டிக்ரில் செய்யவும்
-டாலி பாலா
பரிமாறும் அளவு: 1
மொத்த கலோரி: 447, புரதம்: 17, கொழுப்பு: 33, மாவுச்சத்து: 16.
No comments:
Post a Comment