Cauliflower Coconut Rice (காலிஃப்ளவர் தேங்காய் சாதம் )
தேவையான பொருட்கள்: துருவிய காலிஃப்ளவர் - கால் கிலோ,
தேங்காய் - அரை கப் (100 கிராம்), உப்பு - தேவையான அளவு, தாளிக்க: நெய் - 1 மேஜைக்கரண்டி, கடுகு - அரை தேக்கரண்டி, கறிவேப்பிலை - சிறிதளவு, பூண்டு - 2 பல், பச்சைமிளகாய் - 1, காய்ந்தமிளகாய் - 1, கொத்தமல்லித் தழை - சிறிதளவு.
செய்முறை: காலிஃப்ளவரை துருவி வெந்நீரில் உப்பு போட்டு இரண்டு கொதி கொதிக்க விட்டு தண்ணீரை வடிக்கவும். ஒரு வாயகன்ற வானலியில் தாளிக்க கொடுத்துள்ள அனைத்து பொருட்களையும் ஒன்றன் பின் ஒன்றாக சேர்த்து வதக்கி காலிஃப்ளவர் மற்றும் தேங்காய் சேர்த்து ஒரு கை தண்ணீ தெளித்து வதக்கி முடிபோட்டு 3 நிமிடம் வேகவிட்டு இறக்கவும். கடைசியாக சிறிது கொத்துமல்லித்தழை மற்றும் ப்ரஷ் தேங்காய் துருவல் சேர்த்து சாப்பிடவும்.
குறிப்பு: இதற்கு தொட்டுக்கொள்ள பேலியோ மீன் குழம்பு, தந்தூரி மீன் கிரில், அவகேடோ சட்னி நன்றாக இருக்கும்.
ஜலீலா கமால்
பரிமாறும் அளவு: 1
மொத்த கலோரி: 632, புரதம்: 11, கொழுப்பு: 52, மாவுச்சத்து: 27.
No comments:
Post a Comment