
Sugar beet Cush(சர்க்கரைவள்ளிக் கிழங்கு கூஷ்)
வயது - குழந்தையின் 6 வது மாதத்தில் இருந்து தரலாம்
தேவையானவை :
சர்க்கரை வள்ளிக் கிழங்கு - ஒன்று
பட்டை தூள் அல்லது ஏலக்காய் தூள் - தேவையெனில்
• வெல்லக்கரைசல் அல்லது பனங்கல்கண்டு தேவையெனில்
செய்முறை:
1. சர்க்கரை வள்ளிக் கிழங்கை எடுத்து நான்கு துண்டுகளாக்கி கொள்ளவும். கிழங்கில் அதிகளவில் நார்கள் இருப்பதால் அதனை சிறு சிறு துண்டுகளாக வெட்டுவது கடினம், எனவே
2. இதனை தண்ணீரில் வேசு வைக்கவும் அல்லது ஆவியில் வேகவைத்துக் கொள்ளலாம். பிரஷர் குக்கரில் 2 முதல் 3 விசில் வரை விடவும்.
3. ஒருவேளை நீங்கள் மைக்ரோ வேவ் அவனில் பேக் செய்வதாக இருந்தால் 400 பாரன்ஹீட்டில் 40 முதல் 45 நிமிடங்கள் வரை வேக வைக்கவும்..இதளை பாயில் சுவரில் சுற்றி அதில் சிறு சிறு
துளைகள் இட்டு அவனிஸ் வேக விடவும், 4. இதன்பிறகு தோலை நீக்கிவிட்டு நன்றாக மசித்துக் கொள்ளவும். இத்துடன் பட்டைத்தூளை,
சேர்த்து வெதுவெதுப்பான நிலையில் பரிமாறவும்.
தெரிந்து கொள்ள வேண்டியது:
கடைகளில் இதை வாங்கும் போது எந்த வித கீறல்களும் இல்லாமல், அதன் மேல் பகுதியில் எந்த
புள்ளிகளும் இல்லாமல் பார்த்து வாங்குங்கள், கிழங்கை கைசுளால் தொடும் போது அது சுடினமாக
இருக்க வேண்டும். இதில் வைட்டமின் ஏ மற்றும் பீட்டா கரோட்டீன் சத்துகள் இருக்கிறது.
இதில் உள்ள நார்ச்சத்து குழந்தைகளுக்கு ஏற்படும் மலச்சிக்கல் பிரச்சினையை தீர்க்கும்,
“சர்க்கரைவள்ளி கிழங்கில் வைட்டமின் ஏ மற்றும் பீட்டா கரோட்டீன்
சத்துகள் இருக்கிறது"
"இதில் உள்ள நார்ச்சத்து குழந்தைகளுக்கு ஏற்படும் மலச்சிக்கல் பிரச்சினையை தீர்க்கும்"
No comments:
Post a Comment