Stir in the spinach (வாதநாராயண கீரை அடை )
வாதநாராயண கீரை அடை
தேவையான பொருட்கள்:
கேழ்வரகு மாவு - 2 பாகம்
வாநாராயண கீரை (ஆய்ந்தது) - 1/2 பாகம் பச்சைமிளகாய் - 4 நறுக்கி கொள்ளவும்) கடுகு, கறிவேப்பிலை, மல்லிதழை, உப்பு, எண்ணெய், பெருங்காயத்தூள் - தேவையான அளவு
நறுக்கிய வெங்காயம் - 1/2 கப்
செய்முறை:
வாணலியல் சிறிது எண்ணெய் விட்டு கடுகு போட்டு பொரிந்தவுடன் பச்சைமிளகாய், வெங்காயம் சேர்த்து வதக்கி பின்பு கீரையையும் சேர்த்து வதக்கி கேழ்வரகு மாவில் கொட்டி, உப்பு, பெருங்காயத்தூள், கறிவேப்பிலை, மல்லிதழை
சேர்த்து தேவையான அளவு நீர்விட்டு பிசைந்து உருண்டும் பதத்தில் வைக்கவும். பின்பு தோசைக்கல்லில் டீஸ்பூன் எண்ணெய் விட்டு ஒரு உருண்டை மாவு எடுத்து அடையாக தட்டி ஒருபக்கம் வெந்ததும் திருப்பிப்போட்டு சிறிது எண்ணெய்விட்டு மறுபக்கமும் வெங்தவுடன் எடுத்துச் சாப்பிடலாம். இதற்கு தொட்டுக்கொள்ள தேங்காய் சட்னி (அ) பூண்டு சட்னி ஏற்றது. மிகவும் சுவையாக இருக்கும்.
பலன்: வாதத்தைக் குறைப்பதாலேயே இது வாத நாராயணக் கீரை ஆகும். கேழ்வரகில் உள்ள அதிகளவு கால்சியமும், கீரையும் மூட்டு வலி நோயாளிகளுக்கு மிகவும் நல்லது,
No comments:
Post a Comment