Curry leaves broth (கறிவேப்பிலை குழம்பு )
தேனையான பொருட்கள்: கறிவேப்பிலை -2 கப்
தேங்காய் - 1/2 கப்
கடலை பருப்பு - 2 டீஸ்பூன் உளுத்தம்பருப்பு - 2 டீஸ்பூன்
தனியா (மல்லி) - 1 டீஸ்பூன் வெந்தயம் - 1/2 டீஸ்பூன்
காய்ந்த மிளகாய் - 6 முதல் 8
புளி - சிறிய எலுமிச்சை அளவு
உப்பு, கடுகு, நல்லெண்ணெய், பெருங்காயம் தேவையான அளவு
செய்முறை:
கடலைப்பருப்பு, உளுத்தம்பருப்பு, வெந்தயம், மல்லியை வறுத்துக்
கொள்ளவும். வரமிளகாய், கறிவேப்பிலை. தேங்காய் இவற்றை எண்ணெயில் வதக்கிக் கொள்ளவும். மேற்கண்ட அனைத்தையும் அரைத்துக்கொள்ளவும்.
வாணலியில் எண்ணெய் ஊற்றி கடுகு போட்டு பொரிந்தவுடன் புளியைக்
கரைத்து ஊற்றி அரைத்த விழுதைக் கலந்து தேவையான அளவு உப்பு, பெருங்காயப்
பொடி போட்டு கொதிக்க வைத்து இறக்கவும்.
பலன்: கறிவேப்பிலை இரும்புச்சத்து மிகுந்தது. இரத்த விருத்தி உண்டாகும்.
இளநரை, முடியுதிரல் குறையும்.
No comments:
Post a Comment