Spinach spinach juice (மணத்தக்காளி கீரை தண்ணிசாறு ) - COOKING TIPS AND COOKING STYLE

We providing Latest Cooking tips and cooking notes for free

Sunday, 18 July 2021

Spinach spinach juice (மணத்தக்காளி கீரை தண்ணிசாறு )

Spinach spinach juice  (மணத்தக்காளி கீரை தண்ணிசாறு  )


தேவையான பொருட்கள்:

பயத்தம் பருப்பு - 2 டீஸ்பூன்

சிறிய வெங்காயம் – 10 மணத்தக்காளி கீரை - 1 கப்

தண்ணீர் - 1/2 லிட்டர் சீரகம் - 1 டீஸ்பூன்.

உப்பு - தேவையான அளவு

செய்முறை:

பயத்தம்பருப்பை வேக வைத்துக்கொள்ளவும். 1/2 லிட்டர் தண்ணீரில் வேகவைத்த பருப்பு, உரித்த வெங்காயம், சீரகம், உப்பு இவற்றைப்போட்டு கொதி வந்தவுடன் கீரையைப் போட்டு வெந்தவுடன் இறக்கி வைத்து காய்ச்சி ஆறிய பால் 1/2 டம்பளர் ஊற்றவும. 1 டீஸ்பூன் தேங்காய் பூ தூவவும். பால் சேர்க்கப்பிடிக்காதவர்கள் தேங்காய்ப் பால்சேர்த்துக் கொள்ளவும்,

பலன்: ஏற்றது.

வாய்ப்புண், வயிற்றுப்புண் குணமாகும். வெய்யில் காலத்திற்கு

இந்த மணத்தக்காளி தண்ணி சாறை சாதத்தில் ரசம்போல ஊற்றி சாப்பிடலாம். சூப் போலவும் அருந்தலாம்.

குறிப்பு : இதே முறையில் அகத்திக்கீரை தண்ணிசாறு முருங்கைக்கீரை
தண்ணி சாறு ஆகியவையும் செய்யலாம்.

அகத்திக்கீரை தண்ணி சாறு 15 நாட்களுக்கு ஒரு முறை எடுத்துக்கொண்டால் குடல் தூய்மையாகும். குடலுறிஞ்சிகளின் செயல் திறன் அதிகரிக்கும்.

No comments:

Post a Comment