Lemongrass Pepper Curry Chives Pepper Curry (மணத்தக்காளி வற்றல் மிளகு குழம்பு சுண்டைவற்றல் மிளகு குழம்பு )
தேவையான பொருட்கள்:
துவரம்பருப்பு - 4 டீஸ்பூன்
மிளகு - 2 டீஸ்பூன் தனியா - 2 டீஸ்பூன் புளி - சிறிய எலுமிச்சை அளவு மணத்தக்காளி வற்றல் 2 டீஸ்பூன்
சீரகம் - 1 டீஸ்பூன்
வரமிளகாய் - 2
பூண்டு - 20 பல்
கடுகு, உப்பு, எண்ணெய் - தேவையான அளவு
செய்முறை:
வெறும் வாணலில் துவரம்பருப்பு, மிளகு, தனியா, சீரகம், வரமிளகாய் இவற்றை
வறுத்து மிக்சியில் விழுதாக அரைத்துக்கொள்ளவும்.
வாணலில் எண்ணெய் ஊற்றி கடுகு போட்டு பொரிந்தவுடன் பூண்டைப்போட்டு | வதக்கி புளியைக் கரைத்து ஊற்றி அரைத்த விழுதைக் கலந்து உப்புபோட்டு கொதிக்க
வைத்து இறக்கவும். இறக்கிய குழம்பில் மணத்தக்காளி வற்றலை தாளித்து சேர்க்கவும்.
இக்குழம்பில் மணத்தக்காளி வற்றலுக்கு பதில் சுண்டைவற்றல் சேர்த்தால்
அதுவே சுண்டை வற்றல் மிளகு குழம்பு. பலன்: நன்கு பசியெடுக்கும், சளி குறையும், சீரண சக்தி பெருகும், வயிறு உப்புசம்
தீரும்.
No comments:
Post a Comment