மிளகாய் சட்னி
தேவையான பொருட்கள்
- மிளகாய் வற்றல் -6
- புளி சிறிதளவு
- பூண்டு 3 பல்
- கறிவேப்பிலை - சிறிதளவு
- உப்பு தேவையான அளவு
- கடுகு -1 சிட்டிகை
- உளுந்து 1ஸ்பூன்
- பெருங்காயம் - 1 சிட்டிகை
- எண்ணெய் தேவையான அளவு
செய்முறை
மிளகாய் வற்றல், பூண்டு, கறிவேப்பிலை, கடுகு, உளுந்து ஆகியவற்றை வாணலியில் லேசாக வறுத்து அதனுடன் புளி, உப் பெருங்காயம் ஆகியவற்றை ஒன்றாகச் சேர்த்து நைசாக அரைக்கவும்.
எண்ணெய் ஊற்றிக் கலக்கவும். காரசாரமாக சட்னி வேண்டுபவர்கள் தாளிக்கத் தேவையில்லை. காரம் குறைவாக வேண்டுபவர்கள் தாளித்துக் கொள்ளலாம்.
No comments:
Post a Comment