Shahi Kuruma (ஷாஹி குருமா )
தேவை: பனீர் - 10 துண்டுகள், கோவா - 1/4 கப், க்ரீம் - தேவைக்கு, மக்காரை (தாமரை விதை வேண்டுமெனில்) - 6 (அ) 8, பச்சைமிளகாய் - 2, தக்காளி - 2, நெய் - 2 மேசைக் கரண்டி, மிளகாய்த்தூள் - 1/2 டீஸ்பூன், ஏலக்காய் -2, பட்டை - 1 சிறிய தண்டு, முந்திரித் துண்டுகள் - 1 டீஸ்பூன், காய்ந்த கறுப்பு திராட்சை - 2 மேசைக் கரண்டி. தாழம்பூ எசென்ஸ் 2 துளி, நறுக்கிய கொத்துமல்லித்தழை, உப்பு - தேவைக்கு, நெய், வெண்ணெய்-1 மேசைக் கரண்டி.
செய்முறை: கடாயில் நெய், வெண்ணெய் விட்டு சூடானதும் பட்டை, ஏலக்காய் சேர்த்துப் பொரிந்ததும் தக்காளி, பச்சைமிளகாய் சேர்த்து வதக்கவும். பனீர் சேர்க்கவும். மிளகாய்த்தூள் சேர்த்து நன்கு கிளறி கோவாவைச் சேர்க்கவும். உடையாமல் பேஸ்ட் பதத்துக்கு வரும் வரை கிளறவும். மற்ற பொருட்களை ஒன்றன்பின் ஒன்றாகச் சேர்த்துக் கிளறி உப்பு போட்டு குறைந்த தணலில் மூடி வைத்து சமைக்கவும்.
நன்றாக சேர்ந்து வந்ததும் நறுக்கிய கொத்துமல்லித் தழையைத் தூவி நெய் 1 டீஸ்பூன் மேலே விட்டு மூடி இறக்கவும்.
அருமையான சுவையில், கம்பு ஸ்பைஸி சப்பாத்தியுடன் சாப்பிட டேஸ்ட்டாக இருக்கும்.
No comments:
Post a Comment