Rye Spicy Chapati - Shahi Kuruma (கம்பு ஸ்பைஸி சப்பாத்தி - ஷாஹி குருமா ) - COOKING TIPS AND COOKING STYLE

We providing Latest Cooking tips and cooking notes for free

Saturday, 24 July 2021

Rye Spicy Chapati - Shahi Kuruma (கம்பு ஸ்பைஸி சப்பாத்தி - ஷாஹி குருமா )

Rye Spicy Chapati - Shahi Kuruma (கம்பு ஸ்பைஸி சப்பாத்தி - ஷாஹி குருமா  )


கம்பு ஸ்பைஸி சப்பாத்தி

தேவை: கம்பு மாவு - 1/2 கப், கோதுமை மாவு - 1/2 கப், சோள மாவு - 1/2 கப், முந்திரி - 6, காய்ந்த மிளகாய் - 4, நெய் - 2 மேசைக் கரண்டி, வெந்நீர் - 1/2 கப், சர்க்கரை - 1 டீஸ்பூன், உப்பு - தேவைக்கு.

செய்முறை: மிளகாய், முந்திரியை அரைக்கவும். மாவு வகைகளைக் கலந்து கொண்டு அதில் உப்பு, சர்க்கரை, மிளகாய் விழுது, நெய் சேர்த்து வெந்நீர் விட்டுப் பிசைந்து அரைமணி நேரம் ஊறவிடவும். பின் மாவை சப்பாத்திக்களாகத் திரட்டி, தோசைக் கல்லில் இட்டு சுற்றிலும் நெய்விட்டு இருபுறமும் நன்கு வெந்ததும் எடுக்கவும். இதற்கு சைட்-டிஷ்ஷாக ஷாஹி குருமா தொட்டுச் சாப்பிட அருமையாக இருக்கும்.

No comments:

Post a Comment