Semolina porridge (ரவை கஞ்சி )
வயது - குழந்தையின் 6 வது மாதத்தில் இருந்து தரலாம்.
தேவையானவை :
ரவை - ஒரு கப்
* நெய் - 2 டீஸ்பூன்
பனங்கல்கண்டு அல்லது வெல்லம் - தேவையான அளவு
* ஏலக்காய் தூள் - ஒரு சிட்டிகை தண்ணீர் - 3 கப்
செய்முறை :
1. பாத்திரத்தில் ரவையை கொட்டி நன்றாக வறுத்துக் கொள்ளவும். இதனை பொடித்துக் கொள்ளலாம் அல்லது அப்படியே சமைக்கலாம்.
2. ஒரு பாத்திரத்தில் 3 சுப் தண்ணீரை ஊற்றி அதை நன்றாக கொதிக்கவிடவும், 3. அதில் வறுத்த ரவையை சிறிது சிறிதாக கொட்டி கட்டிகளில்லாமல் நன்றாக கிளறவும்.
4. ரவை பாதி வெந்து கொண்டிருக்கும்போது பனங்கல்கண்டை சேர்த்து கட்டிகள் இல்லாமல்
கிளறிக் கொண்டு இருக்கவும்..
5. ரவையும் பனங்கல்கண்டும் நன்றாக சேர்ந்து இறக்குவதற்கு முன் நெய்யை சேர்த்துக்
கொள்ளவும். இத்துடன் ஏலக்காய் பொடியை சேர்க்கவும், 6. குழந்தைகள் எளிதாக சாப்பிடுவதற்கு ஏற்றவகையில் தாய்ப்பால் அல்லது பார்முலா மில்க் சேர்த்து தாவும்.
No comments:
Post a Comment