Lotus Seed Porridge or Makana Porridge (தாமரை விதை கஞ்சி அல்லது மக்கானா கஞ்சி )
வயது - குழந்தையின் 6 வது மாதத்தில் இருந்து தரலாம்.
(குழந்தைக்கு முதல் முறையாக உணவு கொடுக்க ஏற்றது)
செய்முறை :
1. தாமரை விதையை வாங்கி அதனை பாதியாக நறுக்கி இளஞ்சிவப்பு நிறத்தில் வறுத்துக்கொள்ளுங்கள்.
2. பீன் இதனை பொடி செய்து கொண்டு காற்றுப்புகாத ஒரு டப்பாவில் போட்டு மூடி வைத்துக்
கொள்ளவும்.
3. தேவையான போது இதில் 2 டேபிள் ஸ்பூன் எடுத்து வெந்நீரில் கலந்து கட்டிகள் இல்லாமல்
குழந்தைக்கு தரலாம். 4. சில நாட்கள் ஆன பிறகு இத்துடன் சீரகத்தூள், உப்பு சேர்த்து கொடுத்தால் ருசியாக இருக்கும்.
தெரிந்து கொள்ளவேண்டியது :
ஒரு ஸ்பூன் தாமரை விதையில் சுமார் 5 கிராம் புரதச்சத்து இருக்கிறது.
இதில் அதிகமான புரதச்சத்து, மாங்கனீசு, மகனீசியம், பாஸ்பரஸ் உள்ளிட்ட சத்துகள் இருக்கின்றன.
இது எளிதாக எல்லா கடைகளிலும் கிடைக்கும். இத்துடன் எதுவும் சேர்க்காமல் இருக்கிறதா
என்பதை பார்த்து வாங்குங்கள்.
"பயணம் செய்யும் போது குழந்தைகளுக்கு கொடுக்க ஏற்ற உணவு இது
No comments:
Post a Comment