Semolina itli - apple alva (ரவை இட்லி - ஆப்பிள் அல்வா )
ரவா இட்லி
தேவை: வறுத்த ரவை - 11/2 கப், புளித்த தயிர் - 3/4 கப், உப்பு
தேவைக்கு, இஞ்சித் துருவல் - 2 டீஸ்பூன், மிளகுத் தூள் - 1 டீஸ்பூன்,
நெய்யில் வறுத்த முந்திரி பருப்பு, உலர் திராட்சை - தலா 10. தாளிக்க: எண்ணெய், நெய் சேர்த்து - 6 டேபிள் ஸ்பூன், பச்சைமிளகாய் 2 (நறுக்கியது). கடுகு, உளுந்து, கடலைப் பருப்பு - தலா 1 டீஸ்பூன், பெருங்காயத்தூள் - 1 டீஸ்பூன், கறிவேப்பிலை, கொத்துமல்லி -
(நறுக்கியது) சிறு கப்.
செய்முறை: வாணலியில் நெய், எண்ணெய் விட்டுக் காய்ந்ததும் தாளிக்கக் கொடுத்தவற்றைத் தாளித்து வைத்துக் கொள்ளவும். ஒரு பவுலில் தயிர் சேர்த்து உப்பு, வறுத்த ரவை இவற்றைத் தயிருடன் சேர்த்து முக்கால் மணி நேரம் ஊறவைக்கவும்.
ஊறியதும் தாளித்தவற்றை அதில் சேர்த்துக் கலந்து விடவும். இஞ்சித் துருவலையும் சேர்த்துக் கலக்கவும். இட்லி மாவு பதத்தில் இருக்க வேண்டும்.
அடுப்பில் இட்லிப் பானையை வைத்து தண்ணீர் ஊற்றிக் கொதிக்க விடவும். பிறகு இட்லித் தட்டில் மாவை ஊற்றி பானையில் வைத்து ஆவியில் வேக விட்டு எடுக்கவும். ரவா இட்லிக்கு சைட்டிஷ்ஷாக ஆப்பிள் அல்வாவைத் தொட்டுச் சாப்பிட டேஸ்டே தனி.
No comments:
Post a Comment