Paneer Gravy (பனீர் கிரேவி )
தேவை: பனீர் - 100 கிராம், தக்காளி - 1/4 கிலோ, வெங்காயம் சிறிது, சோயா சாஸ், சில்லி சாஸ் - தலா 1 டீஸ்பூன், கரம் மசாலாத் தூள், உப்பு, நெய் - 1 கப், மிளகுத் தூள், கொத்துமல்லித் தழை.
செய்முறை: பனீர் சிறு துண்டுகளாக வெட்டி, வாணலியில் நெய் விட்டு, வறுத்து எடுக்கவும். உப்பு, மிளகுத்தூள் போட்டுக் கலக்கவும். இன்னொரு வாணலியில் நெய் விட்டு, வெங்காயம், தக்காளி சேர்த்து வதக்கி, மிக்ஸியில் அரைக்கவும். இந்த விழுதைக் கொதிக்க வைத்து சோயா சாஸ்,
சில்லி சாஸ் தலா 1 டீஸ்பூன், கரம்மசாலாத் தூள், உப்பு போட்டுக் கொதிக்க விடவும். அதில் நெய்யில் வறுத்த பனீர்த் துண்டு களைப் போட்டு கொத்துமல்லித் தழை போட்டுக் கலக்கவும். பனீர் கிரேவி தயார்.
சாமை கிச்சடியுடன் பனீர் கிரேவி தொட்டுச் சாப்பிட்டால் மிக நன்றாக இருக்கும்.
No comments:
Post a Comment