Apple Alva (ஆப்பிள் அல்வா )
தேவை: நல்ல தரமுள்ள ஆப்பிள் - 2 (தோல் சீவித் துருவிக் கொள்ளவும்), சர்க்கரை - 1/2 கப், (வேண்டுமானால் இன்னும் கொஞ்சம் சேர்த்துக்கலாம்), உடைத்து நெய்யில் வறுத்த முந்திரி பருப்பு - 10, ஏலத் தூள் - 1 டீஸ்பூன், நெய் - 4 டேபிள் ஸ்பூன், கார்ன் ஃப்ளார் - 2 டேபிள் ஸ்பூன்.
செய்முறை: வாணலியை அடுப்பில் வைத்து நெய் சேர்த்துக் கொஞ்சம் காய்ந்ததும் துருவிய ஆப்பிளைச் சேர்த்து வதக்கவும். நன்றாக வதங்கியதும், சர்க்கரையைச் சேர்க்கவும். பின்பு அதை நன்றாகக் கிளறவும். நன்றாக வதங்கி சுருண்டு வரும்போது இன்னும் கொஞ்சம் நெய் சேர்க்கவும். அடுப்பை சிம்மில் வைத்தே செய்யவும்.
வாணலியில் ஒட்டாமல் வரும்போது கார்ன் ஃப்ளார் மாவை கொஞ்சமாக பால் விட்டுக் கரைத்து சேர்த்துவிட்டு கட்டியில்லாமல் கிளறிவிடவும். எல்லாமுமாகச் சேர்ந்துக் கொஞ்சம் கெட்டியானதும் ஏலத்தூள், முந்திரிப் பருப்பு சேர்த்து லேசாகக் கலந்து விட்டு இறக்கி சர்விங் பவுலில் எடுத்து வைக்கவும். இந்த அல்வா சூப்பர் சுவையுடன் இருக்கும்.
No comments:
Post a Comment