Rice porridge (அரிசி கஞ்சி)
வயது - குழந்தையின் 6 வது மாதத்தில் இருந்து தரலாம்
தேவையானவை:
. அரிசி 3 டேபிள் ஸ்பூன்
• தண்ணீர் ஓ டேபிள் ஸ்பூன்
செய்டு
1. அரிசியை 15 முதல் 20 நிமிடம் வரை ஊறவைக்கவும்,
2. இதனை நன்றாக கழுவி தண்ணீர் சேர்த்து மிதமான தீயில் வேக வைக்கவும்.
3. அரிசி நன்றாக வெந்த பிறகு சூடாக இருக்கும் போதே கரண்டி அல்லது மத்தால் மசிக்கவும்..
4. கூடுதலாக உள்ள தண்ணீரை வடித்துவிடுங்கள். கூடுதல் சுவைக்கு கொஞ்சம் சீரகத்தூளை சேர்த்துக் கொள்ளலாம்.
தெரிந்து கொள்ள வேண்டியது:
முதலில் சாதாரண அரிசியை பயன்படுத்துங்கள். இது குழந்தைக்கு ஒத்துக் கொண்ட பிறகு
ப்ரௌன் ரைஸை பயன்படுத்துங்கள், சாதாரண அரிசியுடன் ஒப்பிடும் போது ப்ரௌன் ரைஸ் குழந்தைகளின் வயிற்றுக்கு ஒருவித மந்தமான சூழலை உருவாக்கும்.
அரிசி உணவுகள் குழந்தைகளுக்கு சில நேரம் மலச்சிக்கலை உருவாக்கலாம். ஒருவேளை மலச்சிக்கல் ஏற்பட்டால் உடனே அதனை நிறுத்தி விடுங்கள். சில மாத இடைவெளிக்கு பிறகு நீங்கள் அரிசி உணவை கொடுக்கலாம்..
ப்ரௌன் ரைஸில் செலினியம், மெக்னீசியம், நார்ச்சத்து, கார்போஹைட்ரேட் உள்ளிட்ட சத்துகள் அதிகம் இருக்கிறது.
No comments:
Post a Comment