Potato puree can be given from the age of 6 months.(உருளைக்கிழங்கு கூழ் வயது குழந்தையின் 6 வது மாதத்தில் இருந்து தரலாம்.) - COOKING TIPS AND COOKING STYLE

We providing Latest Cooking tips and cooking notes for free

Thursday 15 July 2021

Potato puree can be given from the age of 6 months.(உருளைக்கிழங்கு கூழ் வயது குழந்தையின் 6 வது மாதத்தில் இருந்து தரலாம்.)

Potato puree can be given from the age of 6 months.(உருளைக்கிழங்கு கூழ் வயது குழந்தையின் 6 வது மாதத்தில் இருந்து தரலாம்.)


வேகவைத்து மசித்த உருளைக்கிழங்கு :

தேவையானவை:

* உருளைக்கிழங்கு - ஒன்று (நடுத்தா அளவிலானது)

• தண்ணீர் - ஒரு கட் * ஓமம் அல்லது சீரகப் பொடி - ஒரு சிட்டிகை

செய்முறை:

1. உருளைக்கிழங்கை நன்றாக கழுவி தோல் சீவிக் கொள்ளவும்.

2. இதனை சிறு சிறு துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும். 3. வெட்டிய உருளைக்கிழங்கை சின்ன கிண்ணத்தில் வைத்து தண்ணீர் நிரப்பிய பிரஷர் குக்கரில் வைத்து 2 முதல் 3 விசில்கள் வரும் வரை வேகவிடவும்..

4. நன்றாக வெந்த உருளைக்கிழங்கானது மிருதுவாக இருக்கும். இதனை கைகளால் மசிக்கலாம். அல்லது மிக்ஸியில் கூட அரைத்துக் கொள்ளலாம்.

5. இத்துடன் ஓமம் அல்லது சீரகப்பொடியை சேர்த்துக் கொண்டால் சுவையாக இருக்கும். 6. இந்த கலவையுடன் தாய்ப்பாலை சேர்த்தால் குழந்தைகள் சாப்பிட எளிதாக இருக்கும்.

7, 8 மாதங்களுக்கு பிறகு இத்துடன் வெண்ணெய் சேர்த்தால் சுவை குழந்தைகளுக்கு ரொம்பவே பிடித்துப் போகும்.

தெரிந்து கொள்ள வேண்டியது : உருளைக்கிழங்கை வாங்கும்போது எந்த வித கிறலோ, கறைகளோ இல்லாமல் வாங்குங்கள்.

முளைத்து வரும் கிழங்குகளையும் வாங்க வேண்டாம்.

உருளைக்கிழங்கில் அதிகமான கார்போஹைட்ரேட் சத்து இருப்பதால் குழந்தைகளுக்கு ஏற்றது.

நடுத்தர சைஸில் உள்ள உருளைக்கிழங்கில் 26 கிராம் கார்போஹைட்ரேட் சத்து உள்ளது. உருளைக்கிழங்கு சில குழந்தைகளுக்கு வாயுத் தொல்லையை ஏற்படுத்தும் என்றும் சொல்கிறார்கள். என்வே இதையும் கருத்தில் கொள்ளுங்கள்.

"குழந்தைகளுக்கு முதல் முதலில் கொடுப்பதற்கு ஏற்ற வகையில்

அலர்ஜியை ஏற்படுத்தாத உணவு இது"

No comments:

Post a Comment