Carrot puree(கேரட் கூழ்)
வயது - குழந்தையின் 5வது மாதத்தில் இருந்து தரலாம் வேக வைத்து மசித்த கேரட் :
தேவையானவை:
* கேரட் + ஒன்று(நடுத்தர அளவிலானது)
செய்முறை:
1. கேரட்டை முதலில் நன்கு கழுவி அதனை தோல் சீவிக் கொள்ளவும்.
2. பின் இதனை சின்ன சின்ன துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும்,
3. நறுக்கிய கேரட் துண்டுகளை ஒரு சின்ன கிண்ணத்தில் வைத்து தண்ணீர் நிரப்பிய பிரஷர் குக்கரில் வைத்து 2 விசில் வரை விடவும். 4. அடுப்பை அணைத்து நன்றாக ஆறிய பிறகு கைகளால் மசிக்கவும் அல்லது அரைத்துக்
கொள்ளவும். 5. சுளவக்காக இத்துடன் சீரகத்தூள் அல்லது பட்டை தூள் சிறிது சேர்த்துக் கொள்ளலாம்.
6. தாய்ப்பாலையும் இத்துடன் சேர்த்தால் குழந்தைகள் சாப்பிட எளிதாக இருக்கும்.
7. பாலக் கீரை, உருளைக்கிழங்கு, பீட்ரூட் உள்ளிட்டவற்றையும் இத்துடன் சேர்த்தால் ருசி
அபாரமாக இருக்கும்.
தெரிந்து கொள்ள வேண்டியது :
* குழந்தைகளின் 5வது மாதத்தில் இருந்து கோட்டை நீங்கள் தரலாம்.
. கேரட்டை வாங்கும் போது ப்ரெஷ்ஷாக இருக்கவேண்டும். அதன் மேல் எந்த வித கறைகளும்,
கருப்பு நிறமான புள்ளிகளும் இல்லாமல் பார்த்துக் கொள்ளுங்கள்.
* குழந்தைகளின் உடலில் வைட்டமின் ஏ சத்துகளை உருவாக்கும் பீட்டா கரோட்டீன் என்ற சத்து கேரட்டில் இருக்கிறது"
குழந்தைகளின் உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்கும் தன்மை
கேரட்டிற்கு உண்டு"
No comments:
Post a Comment