Oatmeal (ஓட்ஸ் கஞ்சி )
வயது - குழந்தையின் 6 வது மாதத்தில் இருந்து தரலாம்
தேவையானவை :
• தூளாக அரைத்த ஓட்ஸ் - 2 டேபிள் ஸ்பூன்
* தண்ணீர் - ஒரு கப்
செய்முறை :
1. பாத்திரத்தில் தண்ணீரை ஊற்றி கொதிக்க விடவும்.
2. பீன் அதில் ஓட்ஸ் தூளை சேர்த்து நன்றாக வேக விடவும், 3. இத்துடன் தாய்ப்பால் அல்லது பார்முலா மில்க் சேர்த்து நன்றாக வேக விடவும்.
தெரிந்து கொள்ள வேண்டியது
ஓட்ஸ் பெரும்பாலான குழந்தைகளுக்கு அலர்ஜியை ஏற்படுத்துவதில்லை.
கடைகளில் ஓட்ஸ் வாங்கும்போது அதில் கலந்திருக்கும் பொருட்களை பற்றி தெரிந்து கொண்டு
வாங்குங்கள்.
மற்ற தானியங்களுடன் ஒப்பிடும்போது நார்ச்சத்து அதிகம் நிரம்பிய உணவு இது, உடலுக்கு தீங்கு ஏற்படுத்தும் கொழுப்புகள் இதில் குறைவு. மேலும் குறைவான கொழுப்புச்சத்தும் சோடியம்
சத்தும்
உள்ளன. மேலும் இதில் மாங்கனீசு, தயாமின், மக்னீசியம், பாஸ்பரஸ் உள்ளிட்ட சத்துகளும் உள்ளன.
ஓட்ஸில் மட்டும் தான் புரதச்சத்துகளை உருவாக்கும் தன்மை இருக்கிறது. 'சோயா, பால், இறைச்சி, முட்டை ஆகியவற்றில் கிடைக்கும் புரதச்சத்துகளுக்கு இணையாக இதிலும் இருக்கிறது.
"சோயா, பால், இறைச்சி, முட்டை ஆகியவற்றில் கிடைக்கும் புரதச்சத்துகளுக்கு இணையாக இதிலும் இருக்கிறது"
No comments:
Post a Comment