Kezhvaragu kanji (கேழ்வரகு கஞ்சி )
வயது - குழந்தையின் 6 வது மாதத்தில் இருந்து தரலாம்
தேவையானவை :
. வீட்டில் தயார் செய்த கேழ்வரகு மாவு - ஒரு டேபிள் ஸ்பூன்
தண்ணீர் தேவைக்கேற்ப
* வெல்லப்பாகு - ஒரு டேபிள் ஸ்பூன்
செய்முறை :
1. தண்ணீருடன் கேழ்வரகு மாவை சேர்த்து நன்கு கட்டியில்லாமல் கரைத்துக்கொள்ளவும்.
2. இதனை குறைந்த தீயில் வைத்து சுமார் 5 முதல் 10 நிமிடங்கள் வரை நன்றாக கிளறவும். 3. இத்துடன் வெல்லப்பாகு சேர்த்து குழந்தைக்கு கொடுக்கலாம்.
தெரிந்து கொள்ள வேண்டியது :
வீட்டில் தயாரிக்கும் கேழ்வரகு மாவு குழந்தைக்கு ஏற்றது.
இதில் இரும்புச்சத்து மற்றும் கால்சியம் சத்துகள் அதிகம் உள்ளன. இதில் அதிகளவிலான புரதச்சத்து இருப்பதால் குழந்தைக்கு முதல் முறையாக உணவு கொடுக்கும் போது இதனை கொடுக்கலாம்.
"கேழ்வரகில் அதிகளவிலான புரதச்சத்து இருப்பதால் குழந்தைக்கு முதல் முறையாக உணவு கொடுக்கும் போது இதனை கொடுக்கலாம்"
No comments:
Post a Comment