மசாலா குழம்பு
தேவையான பொருட்கள்
- வெள்ளை முள்ளங்கி -2 அவரைக்காய் 100 கிராம்
- கத்தரிக்காய் -3
- உருளைக்கிழங்கு -2
- முருங்கைக்காய் -2
- மஞ்சள்பொடி - கால் டீஸ்பூன்
- மிளகாய் பொடி மல்லிப்பொடி
- புளி
- உப்பு தேவையான அளவு
- சிறு எலுமிச்சை அளவு - 1 டேபிள் ஸ்பூன்
- கடுகு, உளுந்து - 1 டீஸ்பூன்
- கடலைப்பருப்பு
- கறிவேப்பிலை சிறிதளவு
- துருவிய தேங்காய் - அரை கப்
செய்முறை
காய்கறிகள் எல்லாவற்றையும் சிறிதாகவும் இல்லாமல் பெரிதாகவும் இல்லாமல் ஒரேசீராக நடுத்தரமாக நறுக்கவும்.
தேவையான தண்ணீர்விட்டு வேகவிடவும்.
வெந்தவுடன் உப்பு, மஞ்சள்பொடி, மிளகாய் பொடி, சேர்த்து கொதிக்க வைக்கவும்.
கடைசியாக புளிக்கரைசலுடன் துருவிய தேங்காய், மல்லிப்பொடி சேர்த்து அரைத்த விழுதைச் சேர்த்து சிறிதுநேரம் கொதிக்க விடவும்.
வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி காயவிடவும். எண்ணெய் காய்ந்தவுடன் கடுகைப்போட்டு வெடிக்க விடவும். வெடித்தவுடன் கடலைப்பருப்பு, கறிவேப்பிலை போட்டு வறுக்கவிடவும்.
தாளிதத்தை கொட்டிக் கிளறி இறக்கவும். மணக்கும் இந்த மதுரைக்குழம்பு ஊற்றி சாப்பிட்டால்
சாப்பாடு சுவையாக இருக்கும்.
No comments:
Post a Comment