Ghee twist (நெய் முறுக்கு )
தேவை: பச்சரிசி - 2 கப், கடலை மாவு 1 கப், உப்பு - தேவைக்கு, நெய் - 6 டேபிள் ஸ்பூன், வெண்ணெய் - சிறிது, எண்ணெய் - தேவைக்கு. செய்முறை: பச்சரிசியை ஊறவைத்து நீரை வடித்து மாவாக்கவும். இந்த மாவுடன் கடலை மாவு, நெய், உப்பு, வெண்ணெய் சேர்த்து நீர் விட்டு கெட்டியாக முறுக்கு மாவு பதத்துக்குப் பிசையவும். பின் முள் முறுக்கு அச்சினை முறுக்குக் குழாயில் போட்டுத் தயார் செய்யவும்.
வாணலியில் எண்ணெய் மற்றும் நெய்யை வாசனைக்குச் சிறிதளவு சேர்த்துச் சூடானதும், மாவைப் பிழிந்து பொரித்து எடுக்கவும். இப்போது, சுவையான பச்சரிசி நெய் முறுக்கு தயார்.
No comments:
Post a Comment