Lotus Chips (தாமரைத்தண்டு சிப்ஸ் )
தேவையான பொருட்கள்
தாமரைத்தண்டு
கார்ன் மாவு • அரை கப்
மைதா மாவு அரை கப்
வெள்ளை மிளகு -1 ஸ்பூன்
பொடித்த சர்க்கரை - 1 சிட்டிகை
உப்பு
எண்ணெய்
செய்முறை
- சிறிதளவு
தேவையான அளவு
தாமரைத் தண்டை நன்கு நீரில் கழுவிவிட்டு சிறிய
வட்டமான துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். முக்கால்
டம்ளர் தண்ணீரை கொதிக்கவைத்து இறக்கி உப்பு சேர்த்து
கலக்கவும்.
நறுக்கிய தாமரைத்தண்டை அதில் போட்டு சில நிமிடங்கள் மூடி வைக்கவும்.
பின்னர் தண்ணீரை வடித்துவிட்டு தாமரைத்தண்டு துண்டுகளை உலர்த்தவும். கார்ன் மாவு மற்றும் மைதாமாவு
இரண்டையும் அதனுடன் சேர்த்துக் குலுக்கவும். பத்துநிமிடங்களில் தாமரைத்தண்டு துண்டுகள் மாவை உறிஞ்சிக் கொள்ளும்.
வாணலியில் எண்ணெயை ஊற்றி காயவிடவும். எண்ணெய் காய்ந்தவுடன் தாமரைத் தண்டு துண்டுகளைப்
போட்டு வறுத்தெடுக்கவும். பொடித்த வெள்ளை மிளகுப் பொடி, பொடித்த சர்க்கரை. உப்பு ஆகியவற்றை வறுத்த சிப்ஸின்மேல் தூவவும்.
பின்னர் காற்றுப்புகாத டப்பாவில் எடுத்துவைத்துக் கொண்டு சாதத்திற்குத் தொட்டுக்கொள்ளலாம். சுவையாக இருக்கும்.
No comments:
Post a Comment