Kollu kurma (கொள்ளு குருமா )
தேவையான பொருட்கள்:
24 மணி நேரம் ஊறவைத்து வேகவைத்த கொள்ளு-250 கிராம் குடைமிளகாய்-2
பெரிய வெங்காயம்-5
தக்காளி-2
பச்சைமிளகாய்-2
இஞ்சி-சிறிய துண்டு
பூண்டு-20 பல்
முந்தரி-4
பாதாம் பருப்பு-4
சீரகம்-1 டீஸ்பூன்
கசூரி மேத்தி (வெந்தய தழை உலர்ந்தது)-1 டீஸ்பூன் கசகசா-1/4 டீஸ்பூன்
கரம்மசாலா, தனிமிளகாய்தூள், உப்பு, எண்ணெய்-தேவையான அளவு
செய்முறை:
வாணலியில் சிறிது எண்ணெய் விட்டு பூண்டு. பச்சைமிளகாய், சீரகம், முந்திரி, பாதாம்.
கசூரிமேத்தி, கசகசா, வெங்காயம், தக்காளி நன்றாக வதக்கி ஆறியபிறகு நைசாக அரைத்து
வைக்கவும்.
பின்பு வாணலியில் சிறிது எண்ணெய் விட்டு அரைத்த விழுதை வதக்கி கரம் மசாலாதூள், தனிமிளகாய்தூள் உப்பு, தேவையான அளவுசேர்த்து வதக்கிய பின்பு நறுக்கிய குடைமிளகாயையும் சேர்த்து வதக்கியபிறகு வேகவைத்த கொள்ளை சேர்த்து தேவையெனில் சிறிது தண்ணீர் ஊற்றி கொதிக்க வைத்து இறக்கவும்.
சப்பாத்தி, பூரிக்கு தொட்டுக்கொள்ள மிகவும் சுவையான சத்துமிக்க குருமாவாகும். குறிப்பு: கொள்ளை குக்கரில் வேகவைக்கும்போது தேவையான அளவு தண்ணீர் மட்டும் ஊற்றி வேகவைக்கவும். கொள்ளு வெந்தபிறகு தண்ணீரை வடித்து விடவேண்டாம்.
தண்ணீருடன் சேர்த்து வாணலில் சேர்க்கவும். கொள்ளு வேகவைத்த தண்ணிருக்கு
கொழுப்பைக் கரைக்கு தன்மை உண்டு.
பலன்: உடல் மெலியும், கெட்ட கொழுப்பை அகற்றும், புரதச்சத்து, நார்ச்சத்து நிறைந்தது.
No comments:
Post a Comment