Ek noodles (எக் நூடுல்ஸ் )
தேவையானவை முட்டை - 3, நூடுல்ஸ் - ஒரு பாக்கெட் பெரிய வெங்காயம் - 1. கேரட் - 1) குடமிளகாய் - 1. முட்டைகோஸ் - ஒரு சிறு துண்டு தக்காளி சாஸ் ஒரு டேபிள்ஸ்பூன். மிளகுதூள் அரை உஸ்டன், எண்ணெய் - தேவையான அளவு, உப்பு சுவைக்கேற்ப,
செய்முறை: முட்டையை உப்பு, மிளகுதூள் சேர்த்து நன்கு அடித்து, தோசையாக ஊற்றியெடுங்கள், அதை மெல்வியதாக, நீளநீளமாக நாடுல்ஸ் போலவே நறுக்கிக்கொள்ளுங்கள். காய்கறிகளையும் வெங்காயத்தையும் அதேபோல நீளமாக மெல்லிசாக வெட்டிக்கொள்ளுங்கள்.
ஒரு பாத்திரத்தில் தண்ணீர் கொதிக்கவைத்து, ஒரு டீஸ்பூன் எண்ணெய் ஊற்றி, நூடுல்ஸைப் போட்டு வேகவிடுங்கள். அரைப் பதமாக வெந்ததும் (இல்லையென்றால் குழைந்துவிடும்) எடுத்து நீரை வடித்துவிட்டு பச்சை தண்ணீரில் போட்டு நன்கு அவசிப் பிழிந்து எடுத்துவைத்துக்கொள்ளுங்கள்.
சில துளிகள் எண்ணெய் விட்டுப் பிசறி வைத்துக்கொண்டால், ஒற்றை ஒற்றையாக இருக்கும். ஒரு கடாயில் சிறிது எண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் வெங்காயம், பச்சை மிளகாய், காய்கறிகள் எல்லாவற்றையும் ஒன்றாகப் போட்டு வதக்குங்கள். நன்கு வதங்கியதும், உப்பு, மிளகுதூள், தக்காளி சாஸ் சேர்த்து வதக்கி வதக்குங்கள்.
அடுப்பை 'ஸிம்'மில் வைத்து பச்சை வாசனை போக வேகவிடுங்கள். பிறகு, வேகவைத்த நூடுல்ஸை காய்கறிக் கலவையுடன் சேர்த்து, தீயை நன்கு அதிகமாக்கி, கிளறுங்கள்.
அத்துடன் முட்டையையும் சேர்த்து, நன்கு திரும்பத் திரும்பக் கிளறினால், எல்லாம் சேர்ந்து 'பொலபொஹூ'வெள் வரும்
சத்தும் சுவையும் ஒருசேரக் கலந்த, அருமையான சிற்றுண்டி இது.
No comments:
Post a Comment