Egg broth (முட்டை குழம்பு )
தேவையானவை! முட்டை - 6. சின்ன வெங்காயம் 10. நாட்டு தக்காளி - 3.புளி - எலுமிச்சை அளவு, மிளகாய்தூள் - ஒரு டீஸ்பூன், மிளகு ஒரு டீஸ்பூள், பூண்டு - 10 பல். சோம்பு - அரை டீஸ்பூன், சீரகம் - ஒரு டீஸ்பூன், உப்பு - சுலைக்கேற்ப, எண்ணெய் தேவையான அளவு, மஞ்சள்தூள் - ஒரு சிட்டிகை
செய்முறை வெங்காயம், தக்காளியை நறுக்கிக்கொள்ளுங்கள், மிளகு, மிளகாய்தூன். பூண்டு. சோம்பு, சீரகம் ஆகியவற்றை அரைத்தெடுங்கள் ஒரு பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி, வெங்காயம், தக்காளியை நன்கு வதக்குங்கள். அதோடு. அரைத்த மசாலாவையும் சேர்த்து, மஞ்சள்தூள் சிறிது
போட்டு வதக்குங்கள் புளியை நன்கு கரைத்து வடிகட்டி, வதக்கிய கலவையில் சேர்த்து, உப்பு
போட்டு கொதிக்கவிடுங்கள்.
பச்சை வாசனை போய் குழம்பு கொதித்துக்கொண்டிருக்கும்போதே, மிகவும் வற்றுவதற்கு முன், ஒரு
முட்டையை உடைத்து குழம்பில ஊற்றுங்கள் சில நிமிடங்களில், அது வெந்து மேலே எழும்பி
வரும். அதன் பின்னர், இன்னொரு முட்டையை உடைத்து ஊற்றவேண்டும். அதுவும் வெந்து
மேலே வந்த பிறகு அடுத்த முட்டையை ஊற்றவேண்டும். இப்படியே. ஆறு முட்டைகளையும்,
ஒவ்வொரு முட்டைக்கும் மூன்று நிமிட இடைவெளியில் ஊற்றி கொதிக்கவிடுங்கள். நன்கு
கொதிக்கும்போது, மூடி போட்டு மூடி வைத்து,
தீயைக் குறைத்து 5 நிமிடம் கொதிக்க விடுங்கள்.
பிறகு கறிவேப்பிலை, மல்லித்தழை தூவி இறக்குங்கள். முட்டையில் குழம்பின் உப்பு, காரம் சார்ந்து,
அபார ருசி கொடுக்கும்.
குறிப்பு: முட்டைகளை அப்படியே ஊற்ற விரும்பாதவர்கள். வேகவைத்து உரித்து, மேலும் கீழும் கீறிவிட்டு, குழம்பு கொதிக்கும்போது போட்டு, ஒரே ஒரு முட்டையை மட்டும் உடைத்து ஊற்றி வேகவிடலாம்.
No comments:
Post a Comment