Eggs - Fred Salt (முட்டை - பிரெட் உப்புமா )
தேவையானவை: ஸாவ்ட் பிரெட் - 5 ஸ்லைஸ், முட்டை 5. பெரிய வெங்காயம் - 2, பச்சை: மிளகாய் - 3, பொடியாக நறுக்கிய மல்லித்தழை - ஒரு டேபிள்ஸ்பூன், பொடியாக நறுக்கிய கறிவேப்பிலை ஒரு டீஸ்பூன், கடுகு, உளுத்தம்பருப்பு - தலா அரை டீஸ்பூன் எண்ணெய் - தேவையான அளவு, மஞ்சள்தூள் - சிறிதளவு, உப்பு - சுவைக்கேற்ப,
செய்முறை: பிரெட்டை சிறிய துண்டுகளாக நறுக்குங்கள் உப்பு, மஞ்சள்தூள் சேர்த்து முட்டையை நன்கு அடித்துக்கொள்ளுங்கள். வெங்காயம், பச்சை மிளகாயைப் பொடியாக நறுக்குங்கள். கடாயில் எண்ணெய் ஊற்றி, கடுகு, உளுத்தம்பருப்பு தாளித்து, பச்சை மிளகாய், வெங்காயம், மல்லித்தழை, கறிவேப்பிலை போட்டு, துளி உப்பு சேர்த்து வதக்குங்கள். பிரெட்டை அதில் போட்டுப் புரட்டி அடித்து வைத்த முட்டை கலவையை முதலில் கொஞ்சம் ஊற்றி, நன்கு கிளற வேண்டும். பிறகு இரண்டாம் முறையாக கொஞ்சம் முட்டையை ஊற்றிக் கிளறி,
கடைசியாக மீதி இருக்கும் முட்டையையும் ஊற்றி அடுப்பை 'ஸிம்'மில் வைத்துக் கிளறிக்கொண்டே இருக்கவேண்டும். வெந்ததும் சூடாகப் பரிமாறுங்கள்.
குறிப்பு முட்டையை ஒரே தடலையில் ஊற்றிவிடக்கூடாது. சிறிது சிறிதாக, மூன்று முறையாகத்தான் ஊற்றிக் கிளறவேண்டும். சில நிமிடங்கள் மூடி போட்டு வைத்தும் கிளறலாம். அப்போதுதான் உதிர், உதிராக வேகும்.
No comments:
Post a Comment