Ek Fried Rice (எக் ஃப்ரைடு ரைஸ் )
தேவையானவை: முட்டை - 3. பாசுமதி அரிசி ஒரு கப், நெய் - 2 டீஸ்பூன், கிரீன் சில்லி சாஸ் - 3 டீஸ்பூள். பெரிய வெங்காயம் - 1, குட மிளகாய் - 1, வெங்காயத்தாள் (பொடியாக நறுக்கியது) - 3 டேபிள்ஸ்பூன் (ஃப்ரைடு ரைஸ், நாடுல்ஸ் தயாரிக்கும்போது அஜினோமோட்டோவுக்குப் பதில் அரை டீஸ்பூன் சர்க்கரை சேர்க்கலாம்)
செய்முறை முட்டையை நன்கு அடித்துவைத்துக்கொள்ளுங்கள், பாசுமதி அரிசியை அரை மணி நேரம் ஊறவைத்து முக்கால்பதமாக வடித்தெடுங்கள். ஒரு அகலமான தாம்பாளத்தில் சாதத்தைக் கொட்டி ஆறவிடுங்கள். ஒரு ஸ்பூன் எண்ணெயைக் கலந்து ஆறவைத்தால், சாதம் உதிர் உதிராக இருக்கும், வெங்காயம், குடமிளகாய் இரண்டையும் மெல்லியதாக, நீளநீளமாக நறுக்குங்கள். கடாயில் 2 டீஸ்பூன் நெய்விட்டு, நறுக்கிய வெங்காயம், குடமிளகாயைப் போட்டு வதக்குங்கள். அத்துடன் கால் டீஸ்பூன் உப்பு, சில்லி சாஸ் சேர்த்து வதக்கி, பச்சை வாசனை போனதும், முட்டையை ஊற்றிக் கிளறுங்கள்.
முழுதும் வேகுமுன், முட்டை அரைப்பதமாக இருக்கும்போது, சாதத்தைக் கொட்டிக் கிளறுங்கள். (கவனிக்கவும்:
முட்டை முழுதும் வெந்துவிட்டால் சாதத்தில் ஒட்டாது). சாதமும் முட்டையும் சேர்ந்து வெந்து, பொலபொலவென வரும்போது இறக்கி, நறுக்கிய வெங்காயத்தாள் தூளி, கடகடப் பரிமாறுங்கள்.
No comments:
Post a Comment