Appam on egg plate (முட்டை வட்டில் ஆப்பம் )
தேவையானவை: முட்டை - 5, சர்க்கரை - அரை கப், தேங்காய்ப்பால் - அரை கப் ஓடித்த
முந்திரிப்பருப்பு - 2 டீஸ்பூன், நெய் - கால் கப்.
செய்முறை: முந்திரியை சிறிது நெய்யில் வறுத்துக்கொள்ளுங்கள். முட்டையை உடைத்து ஊற்றி, அத்துடன் ஆறிய பால். சர்க்கரை சேர்த்து அடித்துக்கொள்ளுங்கள். வறுத்த முந்திரிப்பருப்பை அத்துடன் கலந்து, பெரிய தட்டு அல்லது ஏந்தலான பாத்திரம் ஒன்றில் ஊற்றி இட்லிப் பாத்திரத்துக்குள் வைத்து, ஆவியில் வேகவிட்டு எடுத்தால்
சுவையான வட்டில்ஆப்பம் ரெடி கத்தியால் வெட்டி, துண்டுகள் போட்டுப் பரிமாறவேண்டியதுதான். பஞ்சு போல அவ்வளவு மென்மையாகவும் ருசியாகவும் இருக்கும் இந்த முட்டை வட்டில் ஆப்பம்
No comments:
Post a Comment