Ek - Corn soup (எக் - கார்ன் சூப் )
தேவையானவை: முட்டை - 1, கார்ன்ஃப்ளார் - 2 டீஸ்பூன் பால் - 2 கப் மிளகு தூள் - கால் டீன்பூன் உப்பு - சுவைக்கேற்ப (விருப்பப்பட்டால்) காய்கறிகள் நறுக்கிய கலவை (கேரட் கோஸ், காலிஃப்னவர் போன்றவை) - அரை கப், சுவை சேர்க்க: பெரிய வெங்காயம், மல்லித் தழை, பச்னா மிளகாய் மிளகுதூள் போன்றவற்றில் ஏதாவது ஒன்று.
செய்முறை: காய்கறிகள் சேர்ப்பதாக இருந்தால், முதலில் அவற்றை ஒரு கப் தண்ணீர் சேர்த்து வேகவிடுங்கள். கார்ள்ஃப்ளாரைக் கரைத்து அந்த நீரோடு சேருங்கள். அப்படி காய்கறிகள் சேர்க்கவில்லை என்றால், கார்ன்ஃப்ளாரை ஒரு கப் பாலில் கரைத்துக் கொதிக்கவிடுங்கள். கொதித்த பிறகு இன்னொரு கப் பாலையும் அதோடு சேருங்கள்.
கொதிக்கும் போதே முட்டையை நன்கு அடித்து வைத்துக்கொள்ளுங்கள் அடுப்பை 'ஸிம்'மின் வைத்துவிட்டு, அடித்த முட்டையை ஒரு ஸ்பூனால் எடுத்து, சொட்டுச் சொட்டாக விடவேண்டும். முட்டை வெந்து மேலே வந்ததும். உப்பு போட்டு இறக்கி, (விருப்பத்துக்கேற்ப) பொடி யாக நறுக்கிய வெங்காயம், மல்லித்தழை பச்சை மிளகாய் அல்லது மீளகுதூாள் தூவி பரிமாறுங்கள்.
No comments:
Post a Comment