Egg Spice Roast (முட்டை மசாலா ரோஸ்ட் )
தேவையானவை: முட்டை - 4, சின்ன வெங்காயம் - 5, கறிவேப்பிலை - ஒரு ஆர்க்கு, மிளகு ஒரு டீஸ்பூன், சீரகம் - அரை டீஸ்பூன், மஞ்சள்தூள் - ஒரு சிட்டிகை, எண்ணெய் - தேவையான அளவு உப்பு - கால் டீஸ்பூன்.
செய்முறை: முட்டையை துளி உப்பு போட்டு வேகவிட்டு ஓடுகளை நீக்கிவிட்டு இரண்டாக நறுக்கிவைத்துக் கொள்ளுங்கள் மிளகு, சீரகம், சின்ன வெங்காயம், கறிவேப்பிலை. உப்பு. மஞ்சள்தாள் ஆசியவற்றை கெட்டியாக அரைத்துக்கொள்ளுங்கள் நறுக்கிவைத்துள்ள முட்டைகளின் மேல் அரைத்த மசாலாவைத் தடவி (மஞ்சள்கருவைக் கூட வெளியே எடுத்து மசாலாவைத் தடவி, மீண்டும் வெள்ளைக் கருவுக்குள் வைத்து), 2 மணி நேரம் ஊறவிடுங்கள். பிறகு,
தோசைக்கல்லில் மசாலா தடவிய முட்டை துண்டுகளைப் போட்டு, எண்ணெய் ஊற்றி நிதானமாக ரோஸ்ட் செய்து எடுக்கவும். பிரமாதமான ருசியில் அசத்தும் இந்த ரோஸ்ட்
No comments:
Post a Comment