Egg fritters (முட்டை பஜ்ஜி )
தேவையானவை: முட்டை - 2, கடலை மாவு கால் கப், அரிசி மாவு 4 டீஸ்பூன், மைதா மாவு - 3 டீஸ்பூன், சோடா உப்பு - ஒரு சிட்டிகை, மிளகாய்தாள் - அரை டீஸ்பூன், பெருங்காயத்தூள் - கால் டீஸ்பூள், உப்பு - கால் டீஸ்பூன், சீரகம் - காள் டீஸ்பூன், எண்ணெய் - தேவையான அளவு
செய்முறை முட்டையை சிறிது உப்பு சேர்த்து வேகவைத்து, விருப்பமான வடிவத்தில் வெட்டிக்கொள்ளுங்கள். கொடுத்துள்ள பொருட்களில் கடலைமாவு முதல் சீரகம் வரையுள்ள பொருட்களை, சிறிது தண்ணீர் சேர்த்த பஜ்ஜி மாவு பதத்தில் கரைத்துக்கொள்ளுங்கள். வெட்டி வைத்திருக்கும் முட்டை துண்டுகளை,
பஜ்ஜி மாவில் தோய்த்து, சூடான எண்ணெயில் பொரித்தெடுங்கள். மாலை நேரத்தில் சூடாக சாப்பிட ஏற்றது.
No comments:
Post a Comment