Egg Stuffed Puri (முட்டை ஸ்டஃப்டு பூரி )
தேவையானவை: முட்டை - 3. சின்ன வெங்காயம் - 6. பச்சை மிளகாய் 2, மல்லித்தழை கறிவேப்பிலை - தலா சிறிதளவு, கோதுமை மாவு - அரை கப், எண்ணெய் - தேவையான அளவு, உப்பு - கால் டீஸ்பூன், மஞ்சன்தூள் ஒரு சிட்டிகை
செய்முறை வெங்காயம், பச்சை மிளகாய், மல்லித்தழை, கறிவேப்பிலை ஆகியவற்றைப் பொடியாக நறுக்கிக்கொள்ளுங்கள். முட்டையை மஞ்சள்தூள், உப்பு சேர்த்து அடித்துவையுங்கள். ஒரு கடாயில் எண்ணெய் விட்டு, கறிவேப்பிலை போட்டுப் பொரியவிட்டு, வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து வதக்குங்கள், அத்துடன், அடித்து வைத்திருக்கும் முட்டையை ஊற்றி உதிர் உதிராக வரும்வரை
கிளறி, இறக்கிவையுங்கள். கோதுமை மாவில் சிறிது உப்பு, தண்ணீர் சேர்த்துப் பிசைந்து, பூரிகளாகத் திரட்டுங்கள். ஒவ்வொரு பூரியின் மேலும் முட்டை மசாலாவை வைத்துப் பரப்பி,
பூரியை சமோசா போல முக்கோணமாக
மடித்து, சூடான எண்ணெயில் போட்டுப் பொரித்தெடுங்கள். பிக்னிக் போன்ற சிறு பயணங்களுக்கு எடுத்துச் செல்ல ஏற்ற சுவையான சிற்றுண்டி
No comments:
Post a Comment