Egg Curry (முட்டை குருமா )
தேவையானவை: முட்டை - 4. தேங்காய் - அரை மூடி, சோம்பு - ஒரு டீஸ்பூன், பட்டை
1 லவங்கம் - 1, ஏலக்காய் - 1, பச்சை மிளகாய் 4. பொட்டுக்கடலை - 2 டீஸ்பூன், இஞ்சி - ஒரு துண்டு. பூண்டு - பல். புதினா - 5 இலை கறிவேப்பிலை, மல்லித்தழை - தலா சிறிதளவு.
பெரிய வெங்காயம் - 1. நாட்டு தக்காளி 3. எண்ணெய் தேவையான அளவு, உப்பு கவைக்கேற்ப, மஞ்சள்தூள் - ஒரு சிட்டிகை.
செய்முறை முதலில் முட்டையை வேகவைத்து உரித்துக்கொள்ளுங்கள், வெங்காயம், தக்கானியை
உறுக்கிக்கொள்ளுங்கள் கடாயில் ஒரு டீஸ்பூன் எண்ணெய் ஊற்றி, தேங்காய் முதல் புதினா வரையுள்ள பொருட்கள் அனைத்தையும் போட்டு, நன்கு வதக்குங்கள். ஆறியபின்,
அரைத்துக்கொள்ளுங்கள் வாணலியில் எண்ணெய் ஊற்றி, கறிவேப்பிலை, வெங்காயம், தக்காளியைப் போட்டு சிறிது உப்பு சேர்த்து வதக்கி, அரைத்த தேங்காய் மசாலாவைக் சுரைத்து ஊற்றுங்கள். குருமா கொதிக்கும்போது, அவித்த முட்டைகளை மேலும் கீழும் கீறிவிட்டு, அதில் போட்டு கொதிக்கவிடுங்கள். நன்கு கொதித்ததும், மல்லித்தழை தூவி இறக்குங்கள்.
இடியாப்பத்துக்கும் சப்பாத்திக்கும் இணையற்ற ஜோடி இது,
No comments:
Post a Comment