Egg Mutton Ponda (முட்டை மட்டன் போண்டா )
தேவையானவை முட்டை - 4, பிரெட் ஸ்வைஸ் - 4. மட்டள் கைமா (கொத்துக் கறி} -100 கிராம். இஞ்சி-பூண்டு விழுது ஒரு டீஸ்பூன், பொட்டுக்கடலை மாவு - ஒரு டீஸ்பூன் கரம் மசாலா தூள் - அரை டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு. மஞ்சள்தூள் - தேவையான அளவு. எண்ணெய் - தேவையான அளவு, பச்சை மிளகாய் - 3.
செய்முறை முட்டையை உப்புப் போட்டு வேகவையுங்கள் ஒரு வாணலியில் சிறிது எண்ணெயைக் காயவைத்து, கொத்துக்கறி, இஞ்சி-பூண்டு விழுது. கரம் மசாலா தூள், மஞ்சள்தூள், பச்சை மிளகாய் எல்லாவற்றையும் போட்டு நன்கு வதக்குங்கள். பிறகு. அவற்றை மிக்ஸியில் போட்டு நன்கு
அரைத்தெடுங்கள். அரைத்த கலவையில் பொட்டுக்கூடலை மாவையும் உப்பையும் சேர்த்து நன்கு
பிசையுங்கள்.
பிசைந்த கலவையில் சிறிது எடுத்து, ஒரு கிண்ணம் போல செய்து, அதனுள் வேகவைத்த முட்டையை வைத்து மூடுங்கள். பிரெட்டை தண்ணீரில் நனைத்துப் பிழிந்து, முட்டை உருண்டையின் மேல் தடவி, 'ரோல்' செய்யுங்கள். எண்ணெயைக் காயவைத்து,
இந்த போண்டாக்களை அப்படியே போட்டுப் பொரித்தெடுங்கள் விருந்துகளில் செய்து வைத்தால் முதலிடம் பிடிக்கும் அயிட்டம் இதுவாகாத்தார் இருக்கும்.
No comments:
Post a Comment