Egg Idly (முட்டை இட்லி )
தேவையானவை: இட்லி மாவு - ஒரு கப். முட்டை - 1. எண்ணெய் ஒரு டீஸ்பூன்.
செய்முறை முதலில், ஒரு டபராவில் பாதியளவுக்கு இட்லி மாவை ஊற்றுங்கள். முட்டையை உடைத்து (அடிக்காமல்),
அப்படியே டபராவிலுள்ள மாவின் மேல் ஊற்றுங்கள். மீதி இருக்கும் இட்லி மாவை, அந்த முட்டை யின் மேல் மூடுவது போல ஊற்றி, இட்லி பாத்திரத்தில் வைத்து நன்கு ஆவியில் வேசு விடுங்கள். நன்கு வெந்ததும் எடுத்து, துண்டுகள் போட்டு, மேலே குருமா, தொக்கு அல்லது கடலைப்பருப்பு கூட்டு போன்ற ஏதாவது ஒரு சைட்-டிஷ்ஷுடன் பரிமாறுங்கள்.
No comments:
Post a Comment