![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhFR5xqHkYXqNUV6i7CoaH6ZUJaANZP2XcREJIY9aKHjKrKyQQwZ2V8o63VAT916Tr0rYR9eOno3NQRijhhtmLexUXTORQbzfU-Z8lQNWNI5Y-Io06gwe2GM1zmPnSuN47MVK2-wi4WqpZy/w232-h132/unnamed+%25282%2529.jpg)
Egg Idiyappam Masala (முட்டை இடியாப்பம் மசாலா )
தேவையானவை: இடியாப்பம் (உதிர்த்தது) - 2 கப், முட்டை - 3, சின்ன வெங்காயம் 10, நாட்டு தக்காளி 3. பூண்டு - 6 பல் மிளகாய்தூள் - ஒரு டீஸ்பூன், உப்பு அரை டீஸ்பூன், எண்ணெய் தேவையான அளவு.
செய்முறை: ஒரு பாத்திரத்தில் துளி உப்பு போட்டு, அதோடு முட்டையை உடைத்து ஊற்றி நன்கு அடித்து வைத்துக்கொள்ளுங்கள். அதை கனமான அடையாக ஊற்றி, சின்னச் சின்ன துண்டுகளாக நறுக்கி வைத்துக்கொள்ளுங்கள். தக்காளி, வெங்காயம், பூண்டு, மிளகாய்தூள் (விரும்பினால் கால்
டீஸ்பூன் கரம் மசாலாதான் சேர்த்து), எல்லாவற்றையும் மிக்ஸியின் நைஸாக அரைத்தெடுங்கள்.
கடாயில் எண்ணெயை ஊற்றி, அரைத்த மசாலாவை அதில் போட்டு நன்கு வதக்குங்கள். நன்கு எண்ணெய் கசிந்து வரும்போது,
உதிர்த்த இடியாப்பத்தையும் நறுக்கிய முட்டை துண்டுகளையும் போட்டு, சுருளச் சுருனக் கிளறி இறக்குங்கள். விருந்துகளில் வைத்துப் பாருங்கள். விசாரணைகள் தூள் பறக்கும்!
No comments:
Post a Comment