
Cotton milk (பருத்திப் பால் )
தேவையான பொருட்கள்
பருத்திக்கொட்டை
வெல்லம்
- 2 கப்
1கப்
துருவிய தேங்காய் - 1 கப்
அரிசி ரவை
ஏலப்பொடி
- 2 ஸ்பூன்
- 1 சிட்டிகை
சுக்குப்பொடி -1 சிட்டிகை
செய்முறை
பருத்திக்கொட்டையை நன்கு கழுவி ஊறவைக்கவும்.
பின்னர் அரைத்து பிழிந்து பால் எடுக்கவும். பால் எடுத்த சக்கையை மீண்டும் அரைத்து இரண்டாவது முறையும் பால் எடுக்கலாம். கொஞ்சம் தண்ணீரை ஒரு பாத்திரத்தில் வைத்து கொதிக்க
விடவும். கொதிக்கும் தண்ணீரில் அரிசி ரவையை கலக்கி
கிண்டவும்.
பின்னர் வடிகட்டிய பருத்திப் பாலை அதனுடன் சேர்த்துக் கொதிக்க விடவும். நன்கு கொதி வந்தவுடன் தட்டிவைத்த வெல்லத்தைப் போட்டு கலக்கவும்.
வெல்லம் நன்கு கரைந்து கொதிக்கும்போது பொடி
செய்த ஏலம், சுக்கு ஆகியவற்றை சேர்த்து இறக்கவும்.
தேங்காய் துருவலை மேலே தூவி பரிமாறலாம். சூடாக சாப்பிட்டால் எப்பேர்ப்பட்ட சளியும் கரைந்துவிடும். மழைக்காலங்களில் அடிக்கடி செய்து கொடுத்தால் குழந்தைகளுக்கு சளித் தொந்தரவு வராது.
பெரியவர்களுக்கும் சத்தான பானமாக விளங்கும் இந்த பருத்திப் பால் சுவையிலும் சூப்பராக இருக்கும்.
No comments:
Post a Comment