Dairy rice (பாலக்கீரை சாதம் ) - COOKING TIPS AND COOKING STYLE

We providing Latest Cooking tips and cooking notes for free

Saturday, 17 July 2021

Dairy rice (பாலக்கீரை சாதம் )

Dairy rice (பாலக்கீரை சாதம்  )


வயது - குழந்தையின் 8வது மாதத்தில் இருந்து தரலாம்.

தேவையானவை:

அரிசி - 2/3 கப்

* துவரம்பருப்பு அல்லது பாசிப்பருப்பு - 1/3 கப்

* வெங்காயம் - ஒன்று

தக்காளி - ஒன்று

பாலக்கீரை - 10 இலைகள்

சீரகம் அல்லது சீரகத்தூள்

மஞ்சள் தூள் - சிறிது

* பூண்டு 2 தேவையெனில்

* நெய் - சிறிது

செய்முறை:

* அரிசி மற்றும் பருப்பு அரை மணி நேரம் ஊறவைத்து நன்றாக கழுவிக் கொள்ளுங்கள்.

* தக்காளி மற்றும் வெங்காயத்தை நறுக்கிக் கொள்ளவும்.

* குக்கரில் நெய் ஊற்றி சீரகம் தாளித்து வெங்காயம் சேர்த்து வதக்கவும் நிறம் மாறும் வரை

வதக்கிய பிறகு தக்காளி, பாலக் கீரை ஆகியவற்றை சேர்த்து நன்றாக வதக்கவும். இத்துடன்

மஞ்சள் தூளையும் சேர்க்கவும். நெய் பிரிந்து வரும் வரை வதக்கிய பிறகு அரிசி பருப்பு சேர்த்து சில நிமிடங்கள் வதக்கிவிட்டு 3

கப் தண்ணீர் சேர்த்து 3 வீசில் வரும் வரை வேகவிடவும். • நன்றாக வெந்த பிறகு இதனை மிக்ஸியில் அரைத்து குழந்தைக்கு கொடுக்கலாம்...
*பாலக் கீரையில் ஆக்சலேட் மற்றும் நைட்ரேட் சத்துகள் இருப்பதால் குழந்தைக்கு இதனை 8 வது மாதத்தில் இருந்து கொடுக்கவும்"

No comments:

Post a Comment