Curry leaves broth (கறிவேப்பிலை குழம்பு)
தேவையான பொருட்கள்
கறிவேப்பிலை
மிளகு
சீரகம்
சின்ன வெங்காயம்
புளி
எண்ணெய்
மா.பருப்பு
உப்பு
மஞ்சள்பொடி
கடுகு பெருங்காயம்
செய்முறை
கால் படி
1ஸ்பூன்
-1ஸ்பூன்
200 கிராம்
எலுமிச்சை அளவு 100 மி.லி
1
தேவையான அளவு சிட்டிகை
அரை
சிறிதளவு
அரை சிட்டிகை
கறிவேப்பிலையை நன்கு கழுவி சுத்தம் செய்து இவைகளை உலரவிடவும். பின்னர் அதனுடன் மிளகு. சீரகம், மா. பருப்பு அனைத்தையும் சேர்த்து நைசாக அரைக்கவும்.
சின்ன வெங்காயத்தை பொடியாக அரிந்து கொள்ளவும். புளியை கரைத்து வைக்கவும்.
வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி காயவிடவும். கடுகு, பெருங்காயம் தாளித்து அதனுடன் அரிந்த வெங்காயத்தைப் போட்டு வதக்கவும்.
வெங்காயம் வதங்கி வரும்
நேரத்தில் கரைத்த புளியை சேர்க்கவும். உப்பு, மஞ்சள்பொடி சேர்த்து கடைசியாக கறிவேப்பிலை விழுதை சேர்த்து எண்ணெய் சுண்டி சுருள வரும்வரை வதக்கவும்.
சுமார் 3 நாட்களுக்கு கெட்டுப்போகாமல் இருக்கும் இந்தக் குழம்பை மோர் சாதம் மட்டுமல்லாமல் இட்லி,
தோசை வகைகளுக்கும் தொட்டுச்சாப்பிடலாம். மிகவும் சுவையாக இருக்கும். வயிற்றுக் கடுப்பைப் போக்கும். அடிக்கடி சாப்பிட்டு வந்தால் தலைமுடி கருமை
நிறமாக வளர்வதற்கு உதவும்.
No comments:
Post a Comment