Chili Garlic Cauliflower (சில்லி கார்லிக் காலிஃப்ளவர் )
தேவையான பொருட்கள்: காலிஃப்ளவர் - அரைகிலோ, மஞ்சள் தூள் -
அரை தேக்கரண்டி, உப்பு - தேவையான அளவு. மசாலா அரைக்க: பழுத்த மிளகாய் - 3, பூண்டு - 5-6 பற்கள், பெரிய வெங்காயம் - 1, பெரிய தக்காளி - 1, உப்பு - தேவையான அளவு,
தேங்காய் எண்ணெய் அல்லது ஆலிவ் எண்ணெய் - 1 அல்லது 2
மேஜைக்கரண்டி. செய்முறை: காலிஃப்ளவரை சிறிய பூக்களாகப் பிரித்து கொதிக்கும் நீரில், மஞ்சள் உப்பு போட்டு ஐந்து நிமிடம் மூடி வைக்கவும். பின்பு வடிகட்டி எடுக்கவும். காலிஃப்ளவரை அரைத்த மசாலாவில் பிரட்டி வைக்கவும். விருப்பப்பட்டால் ஒரு துளி ஆரஞ்ச்
ரெட் கலர் சேர்க்கலாம். கடாயில் எண்ணெய் விட்டு சூடானவுடன் கருவேப்பிலை போடவும், அத்துடன் மசாலா கலந்த காலிஃப்ளவரை சேர்த்து வதக்கவும். நன்கு காலிஃப்ளவரில் மசாலா சேர்ந்து பிரட்டினாற் போல் வரவேண்டும். 10 நிமிடம் நேரம் கூட ஆகலாம். சுவையான சில்லி கார்லிக் காலிஃப்ளவர் ரெடி.
அசிய ஓமர்
பரிமாறும் அளவு: 1
மொத்த கலோரி: 492, புரதம்: 16, கொழுப்பு: 32, மாவுச்சத்து: 34,
No comments:
Post a Comment