Cauliflower Venpongal (காலிஃப்ளவர் வெண்பொங்கல் )
தேவையான பொருட்கள்: காலிஃப்ளவர் - கால் கிலோ, முந்திரி - 10, மிளகு - 1 தேக்கரண்டி, சீரகம் - 1 தேக்கரண்டி, தேங்காய் துருவல் - 2 தேக்கரண்டி, கறிவேப்பிலை - சிறிதளவு, உப்பு - தேவையான அளவு, நெய் - 3 மேஜைக்கரண்டி.
செய்முறை: காலிஃப்ளவரை வெந்நீரில் போட்டு எடுத்து துருவிக் கொள்ளவும். முந்திரி பருப்பு நெய்யில் வறுத்து எடுத்துக் கொள்ளவும். மிளகு, சீரகம் நெய்யில் வறுத்து கரகரப்பாக பொடித்துக் கொள்ளவும். தேங்காய் துருவல், கறிவேப்பிலை, உப்பு சேர்த்து காலிஃப்ளவர் துருவலோடு அனைத்தையும் சேர்த்து கலந்தால் பொங்கல் தயார்.
- சாந்தி, பேட்டை
பரிமாறும் அளவு: 1
மொத்த கலோரி: 440, புரதம்: 8, கொழுப்பு: 37, மாவுச்சத்து: 16.
No comments:
Post a Comment