Cauliflower Malay Kabab (காலிஃப்ளவர் மலாய் கபாப் )
தேவையான பொருட்கள்: காலிஃப்ளவர் - 1 நடுத்தரளவு (அரை கிலோ),
பாகம் - 1: இஞ்சி பூண்டு விழுது - 1 தேக்கரண்டி, எலுமிச்சை சாறு - 1
மேஜைக்கரண்டி, மிளகுத்தூள் - அரை தேக்கரண்டி,
பாகம் - 2: ப்ரெஷ் க்ரீம் - கால் கப், தயிர் - 1 மேஜைக்கரண்டி, பச்சை மிளகாய் கொத்தமல்லிதழை விழுது - ஒன்றரை மேஜைக்கரண்டி, உப்பு -
தேவையான அளவு.
செய்முறை: காலிஃப்ளவரை நடுத்தர பூக்களாக எடுத்து உப்பு கலந்த
15/142
வெந்நீரில் 10 நிமிடங்கள் போட்டு நீரை வடிக்கவும். பாகம் - 1ல் கொடுத்துள்ள பொருட்களை காலிஃப்ளவரை கலந்து அரை
மணிநேரம் ஊறவைக்கவும். பின் பாகம் - 2ல் கொடுத்துள்ள பொருட்களை அதனுடன் கலந்து
மேலும் அரை மணிநேரம் ஊறவைக்கவும். முற்சூடு செய்த அவனில் 210 டிகிரியில் 15 நிமிடங்கள் பேக் செய்து எடுக்கவும். குறிப்பு: இதேபோல் சிக்கன் மற்றும் பனீரில் செய்யலாம்.
-மேனகா சத்யா
பரிமாறும் அளவு: 1 மொத்த கலோரி: 318, புரதம்: 14, கொழுப்பு: 25, மாவுச்சத்து: 23.
No comments:
Post a Comment