Cauliflower Sukkah (காலிஃப்ளவர் சுக்கா )
தேவையான பொருட்கள்: காலிஃப்ளவர் - அரை கிலோ, மஞ்சள் தூள் -
கால் தேக்கரண்டி, உப்பு - தேவையான அளவு, எண்ணெய் - 2 மேஜைக்கரண்டி, நறுக்கிய வெங்காயம் - 1, இஞ்சி பூண்டு விழுது - 2 தேக்கரண்டி, மிளகாய்த்தூள் - அரை தேக்கரண்டி, சீரகத்தூள் - 1 தேக்கரண்டி, மிளகுத்தூள் - 1 தேக்கரண்டி, மல்லித்தூள் - 2 தேக்கரண்டி, நறுக்கிய மல்லி இலை - ஒரு கைப்பிடி.
செய்முறை: காலிஃப்ளவரை சிறு சிறு பூக்களாக பிரித்து வைக்கவும். கொதிக்க வைத்த நீரில் காலிஃப்ளவர், உப்பு மஞ்சள் தூள் சேர்த்து 5 நிமிடம் மூடி வைக்கவும். பின்பு வடிகட்டி விடவும். ஒரு கடாயில் எண்ணெய் சூடு செய்யவும். நறுக்கிய வெங்காயம் போட்டு சிவக்க விடவும், இஞ்சி பூண்டு சேர்க்கவும். நன்கு வதக்கவும். காலிஃப்ளவர் துண்டுகள் சேர்க்கவும்.
நன்கு பிரட்டி விடவும். மேற்குறிப்பிட்ட மசாலா பொருட்கள் மிளகாய்த்தூள், மிளகு, சீரகத்தூள், மல்லித்தூள் அனைத்தும் சேர்க்கவும். பிரட்டி விட்டு சிறிது தண்ணீர் தெளிக்கவும். மூடி போட்டு 5 நிமிடம் வேக விடவும். தீயை குறைத்து வைக்கவும். உப்பு சிறிது சேர்த்து, சரி பார்க்கவும். மசாலா வாடை நன்கு அடங்கி காலிஃப்ளவர் சுருண்டு வர வேண்டும். நறுக்கிய மல்லி இலை சேர்த்து பிரட்டி விடவும். அடுப்பை அணைக்கவும்,
குறிப்பு: இதே போல் சிக்கன், பனீர் மற்றும் பேலியோ காய்கறிகளில் முயற்சிக்கலாம்,
-- ஆசியா ஓமர்
பரிமாறும் அளவு: 1 மொத்த கலோரி: 492, புரதம்: 14, கொழுப்பு: 32, மாவுச்சத்து: 32.
No comments:
Post a Comment